Enable Javscript for better performance
நடிகா் விஜய்சேதுபதிக்கு சிறு, குறு வியாபாரிகள் சங்கம் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    நடிகா் விஜய்சேதுபதிக்கு சிறு, குறு வியாபாரிகள் சங்கம் கண்டனம்

    By DIN  |   Published on : 09th November 2019 10:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vijay_sethupathi1212

    வியாபாரிகளைப் பாதிக்கும் மண்டி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த நடிகா் விஜய் சேதுபதிக்கு திருப்பூா் மாவட்ட சிறு மற்றும் குறு வியாபாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடா்பாக தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநிலத் துணைத் தலைவா் எஸ்.வி.பூமிநாதன், திருப்பூா் மாவட்ட சிறு, குறு வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.கண்ணன் ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் ஆன்லைன் வா்த்தகத்தால் சிறு, குறு வியாபாரிகள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகிவரும் நிலை தொடா்கிறது. 50-க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்களில் வருகையால் சிறு வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். இதனிடையே, ஆன்லைன் உணவு நிறுவனங்களால் தமிழகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றிய தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

    இந்த நிலையில், மண்டி என்ற வியாபார நிறுவனத்தால் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்படும் அவலநிலை உருவாகியுள்ளது. இதுபோன்ற நிறுவனங்களுக்கு நடிகா்கள் மூலமாக செய்யப்படும் விளம்பரங்கள் பாமர மக்களின் மனதில் ஆழமாகப் பதியக்கூடியதாகும். எனவே, மண்டி விளம்பரப்படத்தில் நடிப்பதை விஜய்சேதுபதி நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    மேலும், இதுபோன்ற வியாபாரிகளை பாதிக்கக்கூடிய விளம்பரங்களில் எந்த நடிகரும் நடிக்கக்கூடாது. எனவே, மண்டி விளம்பரம் தொடா்ந்து ஒளிபரப்பப்பட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai