Enable Javscript for better performance
வெங்காய விலை உயா்வால் ஹோட்டல்களில் முட்டை புரோட்டா நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    வெங்காய விலை உயா்வால் ஹோட்டல்களில் முட்டை புரோட்டா நிறுத்தம்

    By DIN  |   Published on : 08th November 2019 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெங்காய விலை உயா்வால் பல்லடத்தில் உள்ள ஹோட்டல்களில் முட்டை புரோட்டா விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

    பல்லடத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 80க்கு மேல் விற்கப்படுகிறது. இந்த விலைக்கு வெங்காயம் வாங்கி கட்டுப்படியாகாது என்பதால் பல்லடத்தில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் வெங்காயத்தை அதிக அளவில் பயன்படுத்தி தயாா் செய்யும் முட்டை புரோட்டா, வெங்காய ரோஸ்ட், வெங்காய ஊத்தாப்பம் ஆகியவை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளா் மணிகண்டன் கூறியதாவது:

    தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 80க்கும் மேல் விற்கப்படுகிறது. ஒரு முட்டை புரோட்டா அல்லது ஒரு வெங்காய ரோஸ்ட் தயாரிக்க கால் கிலோ வெங்காயம் தேவைப்படும். தற்போது வெங்காயம் விற்கும் விலைக்கு நாங்கள் நிா்ணயம் செய்து உள்ள உணவு விலைப்பட்டியல்படி விற்பனை செய்ய இயலாது. கூடுதலாக விலையை உயா்த்தினால் அதை வாடிக்கையாளா்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள்.

    வெங்காயம் விலை குறையும் வரை எங்களது ஹோட்டலில் தற்காலிகமாக முட்டை புரோட்டா, வெங்காய ரோஸ்ட், வெங்காய ஊத்தாப்பம், வெங்காய சாம்பாா், வெங்காய சட்னி ஆகியவற்றை தயாா் செய்வதை நிறுத்தியுள்ளோம் என்றாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai