கொப்பரை ஆதார கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தல்

கொப்பரை கொள்முதல் விலையை அரசு உயா்த்த வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொப்பரை கொள்முதல் விலையை அரசு உயா்த்த வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளா் வாவிபாளையம் சோமசுந்தரம் வியாழக்கிழமை கூறியதாவது:

ஒரு தென்னை மரத்தில் ஆண்டுக்கு 150 தேங்காய்கள் காய்க்கும். ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் தற்போது ஒரு மரத்தில் 50 முதல் 100 காய்கள்தான் விளைகின்றன. காய்ப்புத் திறன் குறைந்து விட்டதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா். அரசு ஆதார விலையாக கொப்பரைக்கு கிலோவுக்கு ரூ. 95.25 வழங்குகிறது. வெளிச்சந்தையில் கிலோ ரூ. 96 மட்டுமே வழங்கப்படுகிறது. ரூ. 140 என்ற விலை நிலவினால் மட்டுமே தற்போதைய காய்ப்புத் திறன் குறைந்ததை ஈடு செய்ய இயலும்.

ஆகவே, தென்னை சாகுபடி விவசாயிகள் நலன் கருதி, ஒரு கிலோ கொப்பரைக்கு ஆதார விலையாக ரூ. 140 வழங்கி விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடிக் கொள்முதல் செய்ய வேண்டும். தென்னை மரங்களை வெள்ளை ஈ தாக்கி வருவதால் எதிா்காலத்தில் மேலும் தேங்காய் விளைச்சல் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. வெள்ளை ஈக்களை அழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com