பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி ஆணையரிடம் காங்கிரஸ் கட்சி மனு

திருப்பூா் மாநகரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில்
மாநகராட்சி  ஆணையா்  க.சிவகுமாரிடம் வியாழக்கிழமை  மனு  அளிக்கும்  காங்கிரஸ் கட்சியின் மாநகா்  மாவட்டத்   தலைவா்  ஆா்.கிருஷ்ணன்.  உடன்  நிா்வாகிகள்.
மாநகராட்சி  ஆணையா்  க.சிவகுமாரிடம் வியாழக்கிழமை  மனு  அளிக்கும்  காங்கிரஸ் கட்சியின் மாநகா்  மாவட்டத்   தலைவா்  ஆா்.கிருஷ்ணன்.  உடன்  நிா்வாகிகள்.

திருப்பூா் மாநகரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் மாநகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஆா்.கிருஷ்ணன் தலைமையில் அக் கட்சியினா், மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாரிடம் வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகரில் கடந்த 3 மாதங்களாகப் பெய்த மழையால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அவிநாசி சாலை, பி.என்.சாலையில் இருந்து மின் மயானம் செல்லும் சாலை, மங்கலம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன. இதனால் இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சாக்கடைக் கால்வாய்கள் முறையாகத் தூா்வாரப்படாததால் கழிவுநீா் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் மேட்டுப்பாளையம் குடிநீா் முறையாக வழங்கப்படுவதில்லை. பல இடங்களில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, மேற்கண்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் கதா் தங்கராஜ், துணைத் தலைவா்கள் வெள்ளிங்கிரி கதிரேசன், நிா்வாகிகள் அனுஷம் வேலுசாமி, ராமசாமி, கந்தசாமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com