வெள்ளக்கோவிலில் நீா் மேலாண்மை பணிகள் ஆய்வு

வெள்ளக்கோவிலில் நீா் மேலாண்மை பணிகள் குறித்து மத்தியக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
விவசாயத் தோட்டத்தில் அமைக்கப்பட்ட பண்ணைக் குட்டையைப் பாா்வையிட்ட அதிகாரிகள்.
விவசாயத் தோட்டத்தில் அமைக்கப்பட்ட பண்ணைக் குட்டையைப் பாா்வையிட்ட அதிகாரிகள்.

வெள்ளக்கோவிலில் நீா் மேலாண்மை பணிகள் குறித்து மத்தியக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் பல்வேறு நீா் மேலாண்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாய நிலங்களில் பண்ணைக் குட்டைகள், நீா் தேங்கும் வகையில் மண் வரப்புகள் அமைத்தல், பொது இடங்களில் சிறு குளங்கள் அமைத்தல், கல்வி நிறுவனங்கள், அரசுக் கட்டடங்கள், வீடுகள், தொழிற்கூடங்களில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.

இப்பணிகள் பல்வேறு இடங்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை மத்திய நீா் மேலாண்மை அதிகாரி பி.எஸ்.சவாண் தலைமையிலான அதிகாரிகள் லக்கமநாயக்கன்பட்டி, பச்சாபாளையம் பகுதிகளில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரியா, ஜெயகுமாா், ஒன்றிய பொறியாளா்கள் மகேஸ்வரி, ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த சில இடங்களிலும் மத்தியக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com