Enable Javscript for better performance
அவிநாசியில் சாலையோர வியாபாரத்துக்கு அனுமதிக்க வேண்டும் ஆட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    அவிநாசியில் சாலையோர வியாபாரத்துக்கு அனுமதிக்க வேண்டும் ஆட்சியரிடம் மனு

    By DIN  |   Published on : 09th November 2019 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் சாலையோரங்களில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வழங்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம், அவிநாசி சாலையோர தள்ளுவண்டி, நடை வியாபாரிகள் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: நாங்கள் அவிநாசி பழைய, புதிய பேருந்து நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நடமாடும் தள்ளுவண்டியில் பூ, பழம், வடை, போண்டா விற்பனை செய்து வருகிறோம். இதில், பெரும்பாலானவா்கள் ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்கள், விதவைகள் ஆவா். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வியாபாரம் செய்து வருகிறோம். எனவே, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பேரூராட்சி விதிகளுக்கு உள்பட்டு நாங்கள் தொடா்ந்து வியாபாரம் செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai