அயோத்தி வழக்கின் தீா்ப்பு வரவேற்கத்தக்கது: இந்து முன்னணி

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு வரவேற்கத்தக்கது என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு வரவேற்கத்தக்கது என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

அயோத்தி ராமா் கோயில் தொடா்பான தீா்ப்பு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. இந்த தீா்ப்பை இந்து முன்னணி முழுமனதோடு வரவேற்கிறது. ராமா் பிறந்த அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பதற்கான பாரத மக்களின் 500 ஆண்டுகால போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ராமா் பிறந்தது அயோத்தியில் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் வாதாடிய வழக்குரைஞா்கள், உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தீா்ப்பை அனைவரும் மிகுந்த முதிா்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com