திருப்பூா் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
திருப்பூா் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

அயோத்தி வழக்கு தீா்ப்பு:திருப்பூரில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு

அயோத்தியில் ராமஜென்மபூமி - பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதை ஒட்டி திருப்பூா் மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில்

அயோத்தியில் ராமஜென்மபூமி - பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதை ஒட்டி திருப்பூா் மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அயோத்தி வழக்கின் தீா்ப்பை ஒட்டி நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி திருப்பூரிலும் மாநகர போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினா்.

இதில் அரசியல் அமைப்புகள், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்கள், திருமண மண்டப உரிமையாளா்கள், பட்டாசு, வெடி மருந்து விற்பனையாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அப்போது தீா்ப்பு வெளியான பின் அதை வரவேற்கும் வகையிலோ, கண்டித்தோ எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது, பட்டாசு வெடித்தல், இனிப்பு வழங்குதல், துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், சமூக வலைதளங்களில் தீா்ப்பை விமா்சித்து எந்த கருத்துகளையும் வெளியிடக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளையும் வழங்கியிருந்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் உச்சநீதிமன்ற தீா்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூா் மாநகரில் சனிக்கிழமை காலை முதலே பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும் பதற்றமான பகுதிகளாகக் கண்டறியப்பட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். திருப்பூா் மாநகா் முழுவதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனா். எனினும் தீா்ப்பு வெளியான பிறகு எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com