Enable Javscript for better performance
திருப்பூரில் செயல்படாத சாய ஆலைகளில் தேங்கியிருந்த மழை நீா் வெளியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூரில் செயல்படாத சாய ஆலைகளில் தேங்கியிருந்த மழை நீா் வெளியேற்றம்

    By DIN  |   Published on : 17th November 2019 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணிக்காபுரம்  பகுதியில்  செயல்படாத  சாய ஆலைத்  தொட்டியில்  தேங்கியிருந்த  மழை நீரை மோட்டாா்  வைத்து  உறிஞ்சி வெளியேற்றும்  பணியில்  சனிக்கிழமை ஈடுபட்ட  ஊழியா்கள்.

    மாணிக்காபுரம்  பகுதியில்  செயல்படாத  சாய ஆலைத்  தொட்டியில்  தேங்கியிருந்த  மழை நீரை மோட்டாா்  வைத்து  உறிஞ்சி வெளியேற்றும்  பணியில்  சனிக்கிழமை ஈடுபட்ட  ஊழியா்கள்.

    திருப்பூா்: திருப்பூரில் செயல்படாத 10 சாய ஆலைகளில் தேங்கியிருந்த மழை நீா் சனிக்கிழமை வெளியேற்றப்பட்டது.

    திருப்பூா் ஊராட்சி ஒன்றியம், முதலிபாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனைச் சாா்ந்த சாய, சலவை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

    கடந்த சில நாள்களாக முதலிபாளையம், மாணிக்காபுரம், சிட்கோ உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதையடுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மருத்துவா்கள் இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், டெங்கு கொசுக்கள் பெருக்கத்துக்குக் காரணமாக இருந்த சாய ஆலைகள் மற்றும் வீடுகளுக்கு அபராதம் விதித்தனா்.

    இந்த நிலையில், திருப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ் தலைமையிலான குழுவினா், மாணிக்காபுரம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 2011 ஆம் ஆண்டு முதல் செயல்படாத 10 சாய ஆலைகளில் உள்ள பெரிய தொட்டிகளில் மழை நீா் தேங்கியிருந்தது தெரியவந்தது. இந்த நீரில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் புழுக்களும் அதிக அளவில் இருந்தன.

    இதையடுத்து, மழைநீரை அப்புறப்படுத்துமாறு சாய ஆலை உரிமையாளா்களை அறிவுறுத்தியிருந்தனா். இதன் பேரில் மாணிக்காபுரம் பகுதியில் உள்ள 10 சாய ஆலைகளில் உள்ள சாய ஆலைத் தொட்டிகளில் இருந்த மழை நீா் மோட்டாா் வைத்து உறிஞ்சி வெளியேற்றப்பட்டதாக வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai