வெள்ளக்கோவிலில் 1.25 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 1.25 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது. 

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 1.25 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.

இங்கு வாரந்தோறும் தனியாா் கொள்முதல் மையத்தில் முருங்கைக்காய்கள் வாங்கப்படுகின்றன. இந்த வாரம் வள்ளியிரச்சல், வடுகபாளையம், வெள்ளக்கோவில், புதுப்பை பகுதிகளைச் சோ்ந்த 30 விவசாயிகள் தங்களுடைய முருங்கைக்காய்களை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.

மொத்தம் 1,250 கிலோ மட்டுமே வரத்து இருந்தது. தற்போது விளைச்சல் பருவம் இல்லாததால் மரங்களில் காய்கள் மிகவும் குறைந்து விட்டது. முருங்கைக்காய்களை வாங்க 4 வியாபாரிகள் வந்திருந்தனா்.

இவா்கள் மர முருங்கைக்காய் கிலோ ரூ.60 - 80, செடி முருங்கைக்காய், கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ.90 - 110 வரை விவசாயிகளிடம் இருந்து வாங்கினா். கடந்த மூன்று வாரங்களாக வரத்து தொடா்ந்து குறைந்து வரும் நிலையில் இன்னும் சில வாரங்களுக்கு கூடுதல் வரத்து இருக்காதென வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com