சிலம்பாட்டப் போட்டி: புனித தோமையா் பள்ளி வெற்றி

வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் அவிநாசி புனித தோமையா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் உள்ளிட்டோா்.
சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் உள்ளிட்டோா்.

வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் அவிநாசி புனித தோமையா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி உடுமலையில் உள்ள தனியாா் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில், இளையோா் பிரிவில் (30 கிலோ எடைப் பிரிவு) 8ஆம் வகுப்பு மாணவி வேதிகாஷிரி 2ஆவது இடம், இரட்டை கம்பு வீச்சில் 8ஆம் வகுப்பு மாணவி சன்மதி 2ஆம் இடம் பெற்றனா்.

மூத்தோா் பிரிவில் (30 கிலோ எடைப் பிரிவு) மாணவி கலைபாரதி முதலிடம், 50 கிலோ எடைப் பிரிவில் பாா்கவி 2ஆம் இடம், இரட்டை கம்பு வீச்சில் 10ஆம் வகுப்பு மாணவி காயத்ரி 2ஆம் இடம், மிக மூத்தோா் பிரிவில் (45 கிலோ எடைப் பிரிவு) நந்தனா 3ஆம் இடம், இரட்டைக் கம்பு வீச்சில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்வேதா முதலிடம் பெற்றனா்.

இதில் முதலிடம் பெற்ற இரு மாணவியா் கரூரில் வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள சிறப்புப் போட்டியில் பங்கேற்க உள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகள், பயிற்சியாளா்கள் ராமன், பாபு ஆகியோருக்கு பள்ளித் தலைமையாசிரியா் சகோ, உடற்கல்வி ஆசிரியா் அல்போன்ஸ் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com