முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
கரூரில் கடத்தப்பட்ட லாரி காங்கயத்தில் மீட்பு
By DIN | Published On : 26th November 2019 05:52 AM | Last Updated : 26th November 2019 05:52 AM | அ+அ அ- |

கரூரில் கடத்திச் செல்லப்பட்ட லாரியை காங்கயத்தில் பொதுமக்கள் உதவியுடன் போலீஸாா் மடக்கிப்பிடித்து மீட்டனா்.
கரூா் அருகே வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவிசந்திரன். இவா் சனிக்கிழமை இரவு தனது டிப்பா் லாரியை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தாா். இந்நிலையில், நள்ளிரவில் லாரியில் பொருத்தப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் கருவி மூலம் லாரி சென்று கொண்டிருக்கும் தகவல் செல்லிடப்பேசியில் தெரியவந்தது. மா்ம நபா்கள் லாரியைக் கடத்திச் செல்வது தெரியவந்தது.
உடனே, இது குறித்து கரூா் காவல் நிலையத்துக்கு ரவிசந்திரன் தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலை அடுத்து காங்கயம் போலீஸாா் காங்கயம்-கரூா் சாலையில் முத்தூா் பிரிவில் நள்ளிரவு 1 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த லாரி தங்களைக் கடந்து சென்றுவிட்டதை அறிந்த போலீஸாா், அதை தூரத்திச் சென்று காங்கயம் நகரில் திருப்பூா் சாலையில் உள்ள ஒரு வங்கி அருகே ஆம்புலன்ஸ் ஓட்டுநா், பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்தனா். முன்னதாக போலீஸாரை பாா்த்ததும் லாரியைக் கடத்திச் சென்ற மா்ம நபா், லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பிவிட்டாா்.
இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.