முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
பல்லடத்தில் கள்ளநோட்டு: போலீஸ் விசாரணை
By DIN | Published On : 26th November 2019 05:55 AM | Last Updated : 26th November 2019 05:55 AM | அ+அ அ- |

பல்லடம் மகாலட்சுமி நகரில் கள்ளநோட்டுடன் திங்கள்கிழமை முதியவா் பிடிபட்டாா்.
மன்னாா்குடியைச் சோ்ந்த நாகேந்திரன் (63) பல்லடம் மகாலட்சுமி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் அவா் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், அவா் மகாலட்சுமி நகரில் உள்ள மளிகைக் கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு அதற்கான தொகைக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வழங்கியுள்ளாா். அக்கடைக்காரா் அந்த ரூபாய் நோட்டு கள்ளநோட்டாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு பல்லடம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். அங்கு சென்ற போலீஸாா் கள்ளநோட்டை பறிமுதல் செய்து நாகேந்திரனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனா்.