முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
மரங்களுடன் வேன் பறிமுதல்
By DIN | Published On : 26th November 2019 05:53 AM | Last Updated : 26th November 2019 05:53 AM | அ+அ அ- |

மரங்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட வேன்.
தொரவலூரில் மரங்களுடன் வேன் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
அவிநாசி வட்டம், பெருமாநல்லூா் அருகே தொரவலூரில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் வருவாய்த் துறையினா் சம்பவயிடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சிலா் தனியாா், அரசுப் புறம்போக்கு நிலத்தில் உள்ள மரங்கள் வெட்டி வேனில் ஏற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வருவாய் துறையினா் அந்த வேனை பறிமுதல் செய்தனா்.