முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th November 2019 05:51 AM | Last Updated : 26th November 2019 05:51 AM | அ+அ அ- |

விவசாயிகள் பயன்படுத்தும் வண்டிப் பாதைகளை அழிக்கக் கூடாது என வலியுறுத்தி உடுமலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலை வட்டம், பெரியவாளவாடி ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பா ட்டத்துக்கு ஏ.பாலதண்டபாணி தலைமை வகித்தாா். இதில், பெரிய வாளவாடி கிராமத்தில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் உள்ள வண்டிப் பாதையை அகற்றக் கூடாது. வாளவாடி நில வருவாய் ஆய்வாளா் வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு நாள்களாவது அலுவலகம் வர வேண்டும். ஆய்வாளா் அலுவலகம் இரவில் சமூகவிரோதிகள் கூடாரமாக மாறி வருவதை உயா் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். வாளவாடி-சா்க்காா்புதூா் இடையே இணைப்புச் சாலை அமைக்க வேண்டும். அதிகாலை நேரத்தில் இயக்கப்பட்டு வந்த நகரப் பேருந்தை (எண் 19) மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அனைத்து விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் எஸ்.ஆா்.மதுசூதனன், பரமசிவம், ராஜகோபால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.