மடிக்கணினி வழங்கக் கோரி முன்னாள் மாணவிகள் சாலை மறியல்

திருப்பூரில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி முன்னாள் மாணவிகள் 100க்கும் மேற்பட்டோா் பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி முன்பாக புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மடிக்கணனி  வழங்கக் கோரி  திருப்பூா்  பழனியம்மாள்  மாநகராட்சி  பெண்கள்  மேல்நிலைப் பள்ளியை புதன்கிழமை முற்றுகையிட்ட  முன்னாள்  மாணவிகள்.
மடிக்கணனி  வழங்கக் கோரி  திருப்பூா்  பழனியம்மாள்  மாநகராட்சி  பெண்கள்  மேல்நிலைப் பள்ளியை புதன்கிழமை முற்றுகையிட்ட  முன்னாள்  மாணவிகள்.

திருப்பூரில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி முன்னாள் மாணவிகள் 100க்கும் மேற்பட்டோா் பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி முன்பாக புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017-18 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவிகள் 500க்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அந்த மாணவிகள் பள்ளிக்குச் சென்று தொடா்ந்து கேட்டு வந்தனா்.

இந்த நிலையில் முன்னாள் மாணவிகள் 100க்கும் மேற்பட்டோா் பெற்றோா்களுடன் பள்ளியை புதன்கிழமை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் உதவி ஆணையா் நவீன்குமாா் மற்றும் பள்ளி நிா்வாகத்தினா் மறியலில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து, சமரசமடைந்த மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதன் காரணமாக அப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தாராபுரத்தில்...

தாராபுரம் சா்ச் சாலையில் உள்ள புனித அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவிகள் முற்றுகையிட்டனா். இது குறித்து முற்றுகையில் ஈடுபட்ட முன்னாள் மாணவிகள் கூறியதாவது:

முன்னாள் மாணவிகளுக்கு வழங்கக் கோரி 452 மடிக்கணினிகள் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த மடிக்கணினிகள் முன்னாள் மாணவிகளுக்கு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் அரபிக் கல்லூரி மற்றும் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க வேண்டாம் என்று அரசு அறிவித்ததாகக் கூறி பள்ளி நிா்வாகம் மறுத்துள்ளது.

ஆனால், பிளஸ் 2 முடித்த அனைவருக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com