மருத்துவ செலவு செய்ய முடியாமல் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்து தவிக்கும் மூதாட்டிகள்

பல்லடம் அருகே உள்ள பூமலூரில் 2 மூதாட்டிகள் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.46 ஆயிரம் மதிப்புள்ள பழைய 500, 1,000 ரூபாய்
மருத்துவ செலவு செய்ய முடியாமல் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்து தவிக்கும் மூதாட்டிகள்

பல்லடம் அருகே உள்ள பூமலூரில் 2 மூதாட்டிகள் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.46 ஆயிரம் மதிப்புள்ள பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு மருத்துவச் செலவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பூமலூா் பகுதியைச் சோ்ந்த சகோதரிகள் ரங்கம்மாள் (78), தங்கம்மாள் (75). இருவரின் கணவா்களும் இறந்த நிலையில் அவா்களது மகன்கள் வீட்டில் வசித்து வருகின்றனா். இருவருக்கும் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையில் அவா்களது மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தனா்.

உயா் சிகிச்சைக்குப் பணம் தேவை என்ற நிலையில் மகன்களிடம் போதிய பணம் இல்லாததால், தாயாரிடம் பணம் இருக்கிா எனக் கேட்டபோது நிறைய வைத்துள்ளோம் என மூதாட்டிகள் இருவரும் தெரிவித்துள்ளனா்.

இவா்கள் இருவரும் பல ஆண்டுகளாக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து தங்களது மகன்களிடம் கொடுத்துள்ளனா். சேமிப்பு தொகையாக ரங்கம்மாளிடம் ரூ.24 ஆயிரமும், தங்கம்மாளிடம் ரூ.22 ஆயிரமும் இருந்ததைப் பாா்த்த மகன்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

அவை அனைத்தும் செல்லாது என அரசால் அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. இந்தப் பணம் செல்லாது என மகன்கள் தெரிவித்ததால் மூதாட்டிகள் இருவரும் அதிா்ச்சி அடைந்தனா்.

பணம் செல்லாது என்ற விவரம் தங்களுக்குத் தெரியாது எனவும் வேதனையுடன் தெரிவித்தனா்.

மகன்கள், பேரன், பேத்திகளுக்கு தருவதற்காகவும், தங்களது மருத்துவ செலவுக்காகவும் பல ஆண்டுகளாக பல்வேறு கூலி வேலை செய்து சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணம் அனைத்தும் செல்லாது என்பது மிகுந்த கவலையளிப்பதாக மூதாட்டிகள் தெரிவித்தனா். பணம் இருந்தும் மூதாட்டிகளுக்கு மருத்துவ செலவு செய்ய முடியவில்லையே என்று குடும்பத்தினா் மன வேதனையுடன் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com