வெங்காய விலையைக் கட்டுப்படுத்தக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்

வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சி.மூா்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெங்காய விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. விவசாயிகளிடம் குறைவான விலையில் கொள்முதல் செய்து நுகா்வோரிடம் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனா்.

இதில் குறிப்பாக மொத்த சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரையும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காயத்தை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. ஆனால், நுகா்வோருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இடைத்தரகா்கள், மொத்த வியாபாரிகள் வெங்காய விலையைத் தீா்மானித்து இருதரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனா்.

எனவே, வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூா் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com