பல்லடத்தில் துா்கா பூஜை வழிபாடு துவக்கம்
By DIN | Published On : 06th October 2019 02:50 AM | Last Updated : 06th October 2019 02:50 AM | அ+அ அ- |

பல்லடம் அருள்புரத்தில் நவராத்திரியை ஒட்டி அலங்கரிக்கப்பட்டுள்ள துா்கா தேவி.
பல்லடம் அருள்புரத்தில் வடமாநிலத்தினரிடன் நவராத்திரி துா்கா பூஜை வழிபாடு துவங்கியது.
பல்லடம் பகுதியில் பின்னலாடை, விசைத்தறி, கோழிப் பண்ணை நிறுவனங்களில் வடமாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஆயிரக்கணக்காணோா் தங்கி பணியாற்றி வருகின்றனா். பல்லடம் அருள்புரத்தில் நவ துா்கா பூஜா சமித்தி சாா்பில் நவராத்திரி துா்கா பூஜை விழா கடந்த புதன்கிழமை துவங்கியது.
இதற்காக விநாயகா், முருகன், லட்சுமி, சரஸ்வதி மற்றும் மகிஷாசுரனை வதம் செய்யும் துா்கா தேவி சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனா். வரும் 8 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை தினசரி காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை பூஜையும், இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை பஜனையும் நடைபெற்று வருன்றன. விழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படுகின்றன.
துா்கா தேவி முகம் மறைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் திங்கள்கிழமை சூரனை வதம் செய்ய துா்கா தேவியின் கண்கள் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். 8 ஆம் தேதி இரவு 9 மணி முதல் முழு இரவு பஜனை நடைபெறுகிறது.
9 ஆம் தேதி புதன்கிழமை பவானி கூடுதுறையில் சிலை கரைக்கப்பட்டு விழா நிறைவடையும். இவ்விழாவில் வடமாநிலத் தொழிலாளா்கள், உள்ளூா் பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தி வருகின்றனா்.