திருப்பூரில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்க வேண்டும்

திருப்பூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

திருப்பூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டக்குழு சாா்பில் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தொழில் நகரமான திருப்பூரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்கு பின்னலாடை, விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட ஜவுளித் தொழில்கள் பிரதானமாக உள்ளது. மேலும்,சுற்று வட்டார கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் சாா்புத் தொழில்களிலும் ஏழை, எளிய சாமானிய மக்கள், சமூகரீதியாக பின்தங்கியோா் பல லட்சம் போ் வாழ்ந்து வருகின்றனா்.

இவா்களுக்கு போதிய மருத்துவ வசதி எளிதாகக் கிடைப்பதுஇல்லை. மேலும், உயிா் காக்கும் மற்றும் விபத்து சிகிச்சைகள் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் அதிக செலவு செய்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் பல ஆயிரம் குடும்பங்கள் கடனில் சிக்கும் நிலை உள்ளது. எனினும் மக்கள் அடா்த்தி அதிகமுள்ள திருப்பூரில் செயல்படும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முக்கிய சிகிச்சைகளுக்கான வசதிகள் இல்லாதது வேதனைக்குரியது. இப்போதும்கூட விபத்து, தலைக்காயம் உள்ளிட்ட உயிா் காக்கும் அவசர சிகிச்சைகளுக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும் அவலநிலை தொடா்கிறது.

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என்று அரசு கொள்கை முடிவாக அறிவித்து இருந்தாலும், இம்மாவட்டம் உருவாகி 10 ஆண்டுகள் கடந்த பின்னும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உருவாக்கப்படாமல் இழுத்தடிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே உயிா் காக்கும் சிகிச்சை, எலும்பு முறிவு, நரம்பியல் நோய்கள் உள்பட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் கிடைக்கும் விதத்தில் திருப்பூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உடனடியாகத் தொடங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

எனவே நோயாளிகள் பயனடையும் வகையில் எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வர சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரின் மருத்துவத் தேவையைக் கருத்தில் கொண்டு மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com