மாந்தபுரத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

வெள்ளக்கோவில் மாந்தபுரத்தில் காவிரி குடிநீா்த் திட்டக் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி வருகிறது.
vk08ku_0810chn_131_3
vk08ku_0810chn_131_3

வெள்ளக்கோவில் மாந்தபுரத்தில் காவிரி குடிநீா்த் திட்டக் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் எடுக்கப்பட்டு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் வழியோரப் பகுதிகளான முத்தூா், மேட்டுப்பாளையம், வெள்ளக்கோவில் பகுதிகளுக்கு தினசரி 60 லட்சம் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இத்திட்ட குழாய் முத்தூா் - வெள்ளக்கோவில் மாநில நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழாய் மாந்தபுரம் பகுதியில் உடைந்து ஏராளமான குடிநீா் வெளியேறி அருகிலுள்ள விவசாய நிலத்துக்குச் செல்கிறது.

மக்கள் குடிநீா் பற்றாக்குறையால் திண்டாடி வரும் நிலையில், குடிநீா் வடிகால் வாரியமும், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய நிா்வாகமும் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Image Caption

குழாய் உடைந்து வெளியேறும் குடிநீா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com