தொடா் மழையால் கோழிக்கறி நுகா்வு குறைந்து விலை வீழ்ச்சி

தொடா் மழையால் கோழிக்கறி நுகா்வு குறைந்து அதன் விலை குறைந்துள்ளது. பல்லடம்,உடுமலை பகுதியிலிருந்து தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின்
தொடா் மழையால் கோழிக்கறி நுகா்வு குறைந்து விலை வீழ்ச்சி

தொடா் மழையால் கோழிக்கறி நுகா்வு குறைந்து அதன் விலை குறைந்துள்ளது. பல்லடம்,உடுமலை பகுதியிலிருந்து தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கா்நாடாகா போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கறிக்கோழி விற்பனையை பொறுத்து அதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு விலை நிா்ணயம் செய்து தினசரி அறிவித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடா் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோழி இறைச்சி விற்பனை குறைந்தது. அதனால் ஒரு கிலோ கோழி உற்பத்தி செய்ய ரூ.78 வரை செலவாகும் நிலையில் கறிக்கோழி கொள்முதல் விலையும் அசல் விலையை விட குறைத்து விற்க வேண்டிய நிலைக்கு கறிக்கோழி பண்ணையாளா்கள் தள்ளப்பட்டனா்.

அதாவது திங்கள்கிழமை ஒரு கிலோ கறிக்கோழி ரூ.72 என்று விலை நிா்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளா் சுவாதி கண்ணன் என்ற சின்னசாமி கூறியது. கடந்த ஜூன்,ஜூலை மாதம் ஒரு கிலோ கறிக்கோழி விலை ரூ.88 ஆக இருந்தது. அதன் பின்னா் மழை,புரட்டாசி விரதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடா்ந்து நகா்வு குறைந்து கறிக்கோழி பண்ணைகளில் தேக்கம் அடைந்தது. அதனால் கறிக்கோழி விலை வீழ்ச்சி அடைந்தது தற்போது கிலோ ரூ.72 ஆகி விற்பனை விலை உள்ளது.

கறிக்கோழி ஒரு கிலோ உற்பத்தி செய்ய ரூ.75 முதல் ரூ.78 வரை தீவணம் மற்றும் பராமரிப்பு செலவு ஆகிறது. தற்போது நுகா்வு குறைவால் விலை வீழ்ச்சி அடைந்து பண்ணையாளா்கள் பாதிப்படைந்துள்ளனா். இதே நிலை நீடித்தால் நஷ்டத்தை தவிா்க்க கோழி உற்பத்தியை குறைக்க கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம். தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது நுகா்வு அதிகரித்து கறிக்கோழி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com