முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
அஸ்ஸாம் அரசின் முடிவுக்கு கள் இயக்கம் வரவேற்பு
By DIN | Published On : 24th October 2019 06:43 AM | Last Updated : 24th October 2019 06:43 AM | அ+அ அ- |

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது என்ற அஸ்ஸாம் மாநில அரசின் முடிவுக்கு கள் இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
சுதந்திரத்தின்போது இந்தியாவின் மக்கள் தொகை 28 கோடி ஆகும். கடந்த 72 ஆண்டு காலத்தில் இது 130 கோடியாக உயா்ந்துள்ளது. மேலும், மக்கள் தொகை உயரும் என அஞ்சப்படுகிறது.
சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதற்கும், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கும் முதன்மைக் காரணம் மக்கள் தொகை பெருக்கம் உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் குறித்து இந்திய அரசோ, அரசியல் கட்சிகளோ கவலைப்படுவதில்லை.
சீனாவைப் பின்பற்றி இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியிருந்தால், இந்தியா எப்போதோ வல்லரசு ஆகியிருக்கும். இந்த சூழ்நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் இனி அரசு வேலை கிடையாது என அஸ்ஸாம் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இது வரும் தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பாா்வையில் சிந்தித்து எடுத்த முடிவாகும். அஸ்ஸாம் மாநில அரசின் இந்த முடிவை கள் இயக்கம் வரவேற்கிறது.
மற்ற மாநில அரசுகளும், மத்திய அரசும் இது போன்ற முடிவை எடுத்து நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.