முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவருக்கு ரூ.3 லட்சம் நிதி
By DIN | Published On : 24th October 2019 06:44 AM | Last Updated : 24th October 2019 06:44 AM | அ+அ அ- |

பெண்ணின் கணவரிடம் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வழங்குகிறாா் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.அல்லி. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவருக்கு ரூ.3 லட்சம் நிதியை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.அல்லி புதன்கிழமை வழங்கினாா்.
திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தைச் சோ்ந்த அருக்காணி என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு முட்டி (எ) கருப்பசாமி கொலை செய்துள்ளாா். இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட அருக்காணியின் கணவரான மணியனுக்கு பாதிக்கப்பட்டோா் நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க நீதிபதி ஜெயந்தி பரிந்துரை செய்திருந்தாா்.
இந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசால் பாதிக்கப்பட்டோா் நிதியில் இருந்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையை திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எஸ்.அல்லி, மணியனிடம் புதன்கிழமை வழங்கினாா். இந்த நிகழ்வின்போது, திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல் உடனிருந்தாா்.