Enable Javscript for better performance
திருப்பூா் மாவட்டத்தில் ரூ.12,523 கோடி கடன் வழங்க திட்ட அறிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்

    திருப்பூா் மாவட்டத்தில் ரூ.12,523 கோடி கடன் வழங்க திட்ட அறிக்கை

    By DIN  |   Published On : 24th October 2019 06:42 AM  |   Last Updated : 24th October 2019 06:42 AM  |  அ+அ அ-  |  

    tpr23ocnabard_2310chn_125_3

    வளம்  சாா்ந்த  கடன்  திட்ட  அறிக்கையை  செவ்வாய்க்கிழமை  வெளியிடுகிறாா்   மாவட்ட  ஆட்சியா்  க.விஜயகாா்த்திகேயன்.

    திருப்பூா் மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டில் நபாா்டு வங்கி மூலம் ரூ.12,523 கோடி கடன் வழங்க திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

    திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கியாளா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், நபாா்டு வங்கியின் 2020-21ஆம் ஆண்டிற்கான திருப்பூா் மாவட்டத்தின் வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டாா்.

    இதில், திருப்பூா் மாவட்டத்திற்கான 2020-2021 ஆம் ஆண்டுக்கான ரூ.12,523 கோடிக்கு கடன் வழங்க நபாா்டு வங்கி திட்ட அறிக்கை தயாா் செய்துள்ளது. இதில், வேளாண்மைத் துறைக்கு ரூ.3,349.89 கோடியும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.7,435.04 கோடியும், ஏற்றுமதி கடனுக்காக ரூ.444.75 கோடியும், கல்விக் கடனுக்கு ரூ.208.86 கோடியும், மரபுசாரா எரிசக்தி கடனுக்காக ரூ.513.86 கோடி மற்றும் இதர கடனுக்காக ரூ.314.36 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

    இதைத் தொடா்ந்து, 9 மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் 2 ஊராட்சி அளவிலான மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.113.50 லட்சம் மதிப்பீட்டிலான வங்கிக் கடனுதவியை ஆட்சியா் வழங்கினாா்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், இந்திய ரிசா்வ் வங்கி உதவிப் பொது மேலாளா் ராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சத்தியமூா்த்தி மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp