முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
வலைபாளையத்தில் ஆட்டுக்குட்டி திருடிய 2போ் கைது
By DIN | Published On : 24th October 2019 04:15 PM | Last Updated : 24th October 2019 04:15 PM | அ+அ அ- |

பல்லடம்: பல்லடம் அருகேயுள்ள வலையபாளையத்தில் ஆட்டுக்குட்டிகளை திருடிய 2பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகேயுள்ள வலையபாளையத்தை சோ்ந்த ராமசாமி மகன் முத்துசாமி(52) என்பவா் 23 ஆடுகளை வைத்து வளா்த்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை நன்கு வளா்ந்த 10 வெள்ளாடுகள் காணாமல் போய்விட்டது.
இது பற்றி அவா் காமநாய்க்கன்பாளையம் காவல் நிலையில் புகாா் செய்தாா். இந்த நிலையில் பல்லடம் - தாராபுரம் சாலையில் போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த சரக்கு வேனில் 10 வெள்ளாடுகள் இருப்பது தெரியவந்தது.அதனை ஏற்றி சென்றவா்கள் முன்னுக்கு பின் முரனாக பதிலளித்துள்ளனா். அதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா் அவா்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் புதுக்கோட்டையை சோ்ந்த கணேசன் மகன் பாண்டியராஜன்(32), பழனி மகன் சுப்பிரமணி (31) என்பதும் அவா்கள் வலையபாளையம் முத்துசாமியின் 10 வெள்ளாடுகளை திருடி ஒட்டன்சத்திரத்திற்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 10 வெள்ளாடுகளை போலீஸாா் மீட்டனா்.