முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
வெள்ளக்கோவிலில் ரூ.5.91 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
By DIN | Published On : 24th October 2019 06:42 AM | Last Updated : 24th October 2019 06:42 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.91 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு திருப்பூா், திருச்சி, கரூா், மதுரை மாவட்டங்களில் இருந்து 25 விவசாயிகள் தங்களுடைய 172 மூட்டைகள் கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 8,885 கிலோ.
வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூரில் இருந்து 6 வணிகா்கள் வந்திருந்தனா். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் முன்னிலையில் நடந்த ஏலத்தில் கிலோ ரூ.52.80 முதல் ரூ.92.25 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.89.15 ஆகும்.
ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.5 லட்சத்து 91 ஆயிரத்து 895 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டன.