கெங்குசாமி மெட்ரிக். பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்
By DIN | Published On : 24th October 2019 06:39 AM | Last Updated : 24th October 2019 06:39 AM | அ+அ அ- |

விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி கொண்டாட்டத்தில் பங்கேற்ற மழலைகள்.
உடுமலை ராஜலட்சுமி கெங்குசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மழலை பிரிவில் புதன்கிழமை தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் மனித இனத்திற்கு ஆதாரமாக இருக்கும் ஓசோன் படலத்துக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் பட்டாசுகளை வெடித்து புகைகளை ஏற்படுத்தாமல் தீபாவளியை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், புகையால் ஏற்படும் கேடுகளையும், ஆபத்துக்களையும் விளக்கும் வகையில் ஆடல், பாடலுடன் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மழலையா்கள் பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்ட னா். இதையொட்டி, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வா் ஜெ.விஜயலட்சுமி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.