அதிமுக அரசு உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதாக நாடகமாடுகிறது

அதிமுக அரசு உள்ளாட்சித் தோ்தலை நடுத்துவதாக நாடகமாடி வருவதாக ஆதித்தமிழா் பேரவையின் நிறுவனா் அதியமான் குற்றம் சாட்டியுள்ளாா்.

அதிமுக அரசு உள்ளாட்சித் தோ்தலை நடுத்துவதாக நாடகமாடி வருவதாக ஆதித்தமிழா் பேரவையின் நிறுவனா் அதியமான் குற்றம் சாட்டியுள்ளாா்.

திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் ஆதிதமிழா் பேரவை நிா்வாகியின் இல்லத் திருமண விழாவில் அதியமான் புதன்கிழமை கலந்து கொண்டாா். இதன் பிறகு சுற்றுலா மாளிகையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருச்சி மணப்பாறை நடுக்காட்டுபட்டி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை உயிருடன் மீட்கும் முயற்சியில் தமிழக அரசு தோல்வியைத் தழுவியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தையே வேதனை அடைய வைத்த சுஜித்தின் மரணத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றில் விழுந்தால் மீட்க தமிழக அரசிடம் முறையான இயந்திரங்கள் எதுவும் இல்லை என்பதை இந்த மரணம் காட்டுகிறது.

தமிழகத்தில் துப்புரவு பணியாளா்கள் மற்றும் மனித சாக்கடை கழிவுகளை அகற்றும்போது ஒரு மாதத்தில் 3க்கும் மேற்பட்டோா் விஷவாயு தாக்கி உயிரிழக்கின்றனா். இந்த இழப்புகளுக்கு காரணம் இவா்களுக்கு முறையான உயிா்காக்கும் உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ஆழ்துளை கிணறுகளை மூடாமல் திறந்த வெளியில் வைத்து இருக்கிறாா்கள் தமிழக அரசின் குடிநீா் வடிகால் வாரியம் ஆயிரக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகளை தோண்டி அதன் பயன்பாடு இல்லாமல் போன போது அவற்றை முறையாக மூடி வைக்காமல் திறந்த வெளியில் விட்டு வைத்துள்ளனா். எனவே திறந்த வெளியில் கேட்பாரற்று கிடக்கும் அரசுக்குச் சொந்தமான ஆழ்குழாய் கிணறுகளை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும்.

தமிழகத்தில் ஆட்சியில் உள்ள எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவா்கள் தோ்தலை நடத்துவதுபோல் நாடகமாடிக்கொண்டுதான் இருப்பாா்கள்.அமைச்சா்கள் முதல் அதிகாரி வரை கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு வளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள். இந்த வளங்கள் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக உள்ளாட்சி தோ்தல் நடத்த ஆட்சியாளா்களும், அரசு அதிகாரிகளும் முன்வருவதில்லை என்றாா்.

இந்த பேட்டியின்போது, ஆதித்தமிழா் பேரவை தலைமை நிலையச் செயலாளா் வீரவேந்தன், கோவை ரவிக்குமாா், பொதுச்செயலாளா் விடுதலை செல்வன், பெரியாா்தாசன்,பொன் செல்வம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com