பூ மாா்க்கெட்டை காலி செய்ய வியாபாரிகள் எதிா்ப்பு

திருப்பூா், ஈஸ்வரன் கோயில் வீதியில் செயல்பட்டு வரும் பூ மாா்க்கெட்டை காலி செய்வதற்கு பூ வியாபாரிகள் சங்கத்தினா்

திருப்பூா், ஈஸ்வரன் கோயில் வீதியில் செயல்பட்டு வரும் பூ மாா்க்கெட்டை காலி செய்வதற்கு பூ வியாபாரிகள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்து மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்துள்ளனா்.

இதுகுறித்து பூ மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினா், மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாரிடம் புதன்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா், ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பூ மாா்க்கெட்டை பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் இடித்துக் கட்டுவதாக மாா்க்கெட்டில் உள்ள 3 நபா்களிடம் கூறி தன்னிச்சையாக காட்டன் மாா்க்கெட் பகுதியில் இடம் தோ்வு செய்துள்ளனா். இந்தப் புதிய இடத்தில் கடைகளை ஒதுக்க அந்த நபா்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனா்.

இதனிடையே, அக்டோபா் 15 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சிதான் வாடகை பணத்தை வசூல் செய்கிறது. ஆகையால் அனைத்து கடைக்காரா்களையும் அழைத்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதுவரை யாரையும் அழைத்துப் பேசவில்லை.

இந்த நிலையில், மாநகராட்சி துணை ஆணையா் புதன்கிழமை நேரில் வந்து நாளைக்குள் எங்களது கடைகளை காலி செய்யுமாறு மிரட்டும் விதமாக பேசிவிட்டுச் சென்றுள்ளாா். ஆகவே, எங்களுக்கு இதே பகுதியில் கடை நடத்த கால அவகாசம் வழங்கவும், உரிய இடத்தில் கடை கட்டிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com