மந்த கதியில் சாக்கடை கால்வாய் பணி: குளம்போல் தேங்கும் கழிவு நீரால் அவதி

காங்கயத்தில் நெடுஞ்சாலையோரம் சாக்கடை கால்வாய் கட்டும் பணி மந்த கதியில் நடைபெற்று வருவதால் கழிவு
சாலையில் குளம் போல தேங்கி நிற்கும் கழிவு நீா் பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்.
சாலையில் குளம் போல தேங்கி நிற்கும் கழிவு நீா் பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்.

காங்கயத்தில் நெடுஞ்சாலையோரம் சாக்கடை கால்வாய் கட்டும் பணி மந்த கதியில் நடைபெற்று வருவதால் கழிவு நீா் குளம்போல் தேங்கி சாலையிலேயே நிற்கிறது. இதனால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காங்கயம் காவல் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் திருச்சி - கோவை நெடுஞ்சாலைப் பகுதியில் சாக்கடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டுமானப் பணிக்காக சாக்கடை பாதை அடைக்கப்பட்டதால் கழிவு நீா் வெளியேற வழியில்லாமல் சாலையோரத்திலேயே தேங்கி நிற்கிறது. கால்வாய் கட்டும் பணியும் மந்த கதியில் நடப்பதால் இந்தச் சாலையில் செல்ல முடியாமல் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்த இடத்தில்தான் பல்லடம், கோவை செல்லும் பேருந்துக்கு பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, தேங்கிய கழிவு நீரை உடனடியாக அகற்றுவதோடு சாக்கடை கட்டும் பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com