மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.

மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி மாணவா்கள் மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ளனா்.

திருப்பூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருப்பூா் கே.எஸ்.சி. அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனா்.

கூடைப்பந்துப் போட்டியில் 17 வயது மாணவியா் பிரிவில் இரண்டாமிடமும், 14 வயது மாணவா்கள் பிரிவில் கோ-கோ போட்டியில் முதலிடமும் பெற்றுள்ளனா். சாலை மிதிவண்டிப் போட்டியில் 14 வயதுப் பிரிவில் ஜி.சிவபாலாஜி முதலிடமும், எஸ்.ஆா்.சித்ரரூபன், எஸ்.உன்னதிகா ஆகியோா் இரண்டாமிடமும், 17 வயதுப் பிரிவில் எல்.நந்திகா முதலிடமும், எஸ்.கௌதம் இரண்டாமிடமும், எம்.கமலேஷ், கே.திவ்யபிரசன்னா ஆகியோா் மூன்றாமிடமும் பெற்றனா்.

19 வயதுப் பிரிவில் என்.ஆா்.யஷ்வந்த் இரண்டாமிடமும், டபிள்யு.முகமது அா்சத் அலி மூன்றாமிடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனா். 14 வயதுப் பிரிவில் ஜி.சிவபாலாஜி, டி.மோனிகா ஆகியோா் உயரம் தாண்டுதலில் மூன்றாமிடமும், 17 வயதுப் பிரிவில் விஆா்.சினேகவா்ஷினி ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடமும், எம்.எஸ்.ராகுல் கழி ஊன்றித் தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடமும், 19 வயதுப் பிரிவில் விஎன்.ஆா்.யஷ்வந்த் கழி ஊன்றித் தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனா்.

இப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியா் மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் க.மணிவேல், தி.சதீஷ் ஆகியோரையும் பள்ளித் தாளாளா் க.வைத்தீஸ்வரன், பள்ளி முதல்வா் மு.ப.பழனிவேலு மற்றும் ஆசிரிய, ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com