யார்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா சார்பில் நாளை முதல் ஜவுளி தொழில் துறை கண்காட்சி

திருப்பூரில் யார்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா ஆகியன சார்பில் ஜவுளி தொழில் துறை கண்காட்சி வியாழக்கிழமை (செப். 12) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

திருப்பூரில் யார்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா ஆகியன சார்பில் ஜவுளி தொழில் துறை கண்காட்சி வியாழக்கிழமை (செப். 12) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
திருப்பூர் ஐகேஎஃப் வளாகத்தில் நடைபெறும் இக்கண்காட்சியில் 139-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனத்தினர் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர். பைபர்களில் இயற்கை ரகத்தில் பருத்தி, கம்பளி, பட்டு, பிளாக்ஸ், செயற்கை ரகத்தில் ரீனெனரேட் மற்றும் சிந்தடிக், யார்ன்களில் இயற்கையானவை மற்றும் பிளெண்டுகள், பருத்தி, கம்பளி, பட்டு, லினன், எலஸ்டிக், பேன்சி மற்றும் சிறப்பு வகைகளும் இடம் பெறுகிறது. துணி ரகங்களில் நிட்டட், எம்பிராய்டரி, கிரே, இம்போர்ட், டெனீம், பாட்டம் வெயிட், பிரிண்டேடு, சில்க், வெல்வெட் மற்றும் விசைத்தறிகளில் தயாரிக்கப்பட்ட ஆடைகளும் இடம் பெறுகின்றன.
இந்த இரு கண்காட்சிகளிலும் மும்பை, தில்லி, சூரத், நெய்டா, லூதியானா, சண்டீகர், ஆமதாபாத், கொல்கத்தா, புணே, கொச்சி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சேலம், திருப்பூர், பெங்களூரு மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும் சர்வதேச பையிங் ஹவுஸ்கள், ஏஜெண்டுகள், விசைத்தறியாளர்கள், நிட்டர்கள், ஆடை தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்கின்றனர்.
இந்தக் கண்காட்சியில் வர்த்தகர்கள் மட்டுமே பங்கேற்கலாம். தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், சேவையளிப்போர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடி வர்த்தக பரிவர்த்தனைகள் மேற்கொள்ள இக்கண்காட்சி உதவும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை கீழ்க்கண்ட இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். ‌w‌w‌w.‌y​a‌r‌n‌e‌x.‌i‌n, w‌w‌w.‌t‌e‌x‌i‌n‌d‌i​a‌f​a‌i‌r.​c‌o‌m, ‌w‌w‌w.‌t‌e‌x‌t‌i‌l‌e‌f​a‌i‌r‌s‌i‌n‌d‌i​a.​c‌o‌m.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com