சுடச்சுட

    

    காங்கயம் அரசுக் கல்லூரியில் நாளை இறுதிக்கட்ட கலந்தாய்வு

    By DIN  |   Published on : 12th September 2019 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கயம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான  இறுதிக்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெறவுள்ளது.
    காங்கயம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2019-2020 ஆம் கல்வியாண்டில் முதுகலை பாடப் பிரிவில் சேர்ந்து பயில்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்த விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இதில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், எம்.காம்., எம்.எஸ்சி. கணிதம், எம்.எஸ்சி. கணிப்பொறி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு இறுதிக் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 
    இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர் உரிய சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் இரண்டு நகல்களோடு, பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai