சுடச்சுட

  

  வெள்ளக்கோவில் அருகே கார் மோதியதில் முதியவர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
  வெள்ளக்கோவில் - செம்மாண்டம்பாளையம் சாலையிலுள்ள பெரியசாமி நகர் அருகே புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது அவ்வழியே வந்த கார் மோதியது. 
  இதில் முதியவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் குறித்த விவரம் உடனடியாகத் தெரியவில்லை. வயது சுமார் 70 இருக்கலாம். 
  காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக முதியவருடைய சடலம் கொண்டு செல்லப்பட்டது. 
  இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai