சுடச்சுட

  

  திருப்பூரில் கனரா வங்கி சார்பில் சணல் பை தயாரிப்புக்கான இலவச பயிற்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
  இதுதொடர்பாக கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் தர்மலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
  திருப்பூர், அனுப்பர்பாளையத்தில் செயல்பட்டு வரும் கனரா வங்கி வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் சணல் பை தயாரிக்க 13 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 
  இந்தப் பயிற்சியில் பங்கேற்க 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட எழுதப்படிக்கத் தெரிந்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி நாள்களில் இலவச உணவும் வழங்கப்பட உள்ளது. 
  இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai