சுடச்சுட

  

  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 14) மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. 
  இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
  நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வரும் சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தற்போது 41,990 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மக்கள் நீதிமன்றத்தில் 5,239 வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. இதுதவிர நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படாத 2,050 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. 
  இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம், வங்கி கடன் பிரச்னைகள் ஆகியவை எடுத்து கொள்ளப்பட்டு சுமூகத் தீர்வு காணப்பட உள்ளது. குடும்ப வழக்குகளில் விவகரத்து தவிர மற்ற வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. 
  பொதுமக்கள் தங்களது வழக்குகளை இந்த மக்கள் நீதிமன்றத்தில் தீர்வுகாண முன்வந்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 
  அதே வேளையில் மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு முன்னர் செலுத்தப்பட்ட நீதிமன்றத் தொகை முழுவதுமாக திருப்பி வழங்கப்படும். ஆகவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai