சுடச்சுட

  

  வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.9.10 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.
  இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூர், புதுப்பை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30 விவசாயிகள் 235 மூட்டைகளில் 12,034 கிலோ கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். 
  வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூரிலிருந்து 7 வணிகர்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனர். 
   விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் நடந்த ஏலத்தில், கிலோ ரூ.47.60 முதல் ரூ.94.35 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.83.85. மொத்தம் ரூ.9 லட்சத்து 10,820-க்கு  விற்பனை நடைபெற்றது. விற்பனைத் தொகை  அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai