வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம்: அரசியல் கட்சியினருடன் ஆட்சியர் ஆலோசனை

வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை தாங்களாகவே சரிபார்த்துக்கொள்வதற்கு செயல்படுத்தப்பட்டு

வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை தாங்களாகவே சரிபார்த்துக்கொள்வதற்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம்  தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது: 
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,  2020 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த வாக்காளர் பட்டியலை தவறு இல்லாத வகையில் செம்மைபடுத்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும். 
இதில், வாக்காளர்கள் தங்களது பெயர் விவரங்கள், குடும்ப உறுப்பினர்களின் விவரங்களையும் கீழ்க்கண்ட இணையதளங்கள் மூலமாக சரிபார்த்துக் கொள்ளலாம்.  
 தேசிய வாக்காளர் சேவை திட்ட இணையதளம்,  இ- பொது சேவை மையங்கள், இ மொபைல் செயலி, வாக்காளர் சேவை மையங்கள், மாவட்ட தொடர்பு மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1950, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் பூர்த்திசெய்யப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தும் சரிபார்த்துக்கொள்ளலாம். 
மேலும், வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்தில் பொதுமக்கள் தாமாக முன்வந்து கீழ்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளித்தும், இணையதளம் அல்லது செல்லிடப்பேசி செயலியில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து  பதிவேற்றம் செய்தும் தங்களது பெயர் விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். 
கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, அரசு அடையாள அட்டை, வங்கி, அஞ்சல் அலுவலக கணக்கு புத்தகம், உழவர் அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ், பிறந்த நாள் குறிப்பிட்டுள்ள மதிப்பெண் சான்றிதழ்கள், பான் அட்டை, மின்சாரம், எரிவாயு, தொலைபேசி  கட்டண  ரசீதுகள்  உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்காளர் சரிபார்ப்பு காலத்தில் வீடு, வீடாக வரும் வாக்குச்சாவடி அலுவர்களிடம் அளித்து சரிபார்த்துக் கொள்ளலாம். 
 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலகங்களான வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களான வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் வாக்காளர் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் மேற்கண்ட வசதிகளை பயன்படுத்திக்கொண்டு தங்களது பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை தாங்களாகவே உறுதி செய்து கொள்ளலாம்.
வாக்காளர் சரிப்பார்ப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, நவம்பர் 30 ஆம் தேதி வரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கான மனுக்களை அளிக்கலாம். 
மேலும், வரும் நவம்பர் 2, 3, 9,10 ஆம் தேதிகளில்  அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கான மனுக்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. ஆகவே, இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். 
இந்தக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் க.சிவகுமார், திருப்பூர் கோட்டாட்சியர் செண்பகவல்லி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  சாகுல்ஹமீது, தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ், அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com