சுடச்சுட

  

  பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஏ.ஜி.கலை, அறிவியல் கல்லூரியில் அனைத்துலக சகோதரத்துவ நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
  சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் செப்டம்பர் 11ஆம் தேதி நிகழ்த்திய சொற்பொழிவை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அனைத்துலக சகோதரத்துவ நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஏ.ஜி.கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரித் தாளாளர் தனராஜசேகர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மாரிமுத்து வரவேற்றார். விழாவில், "விவேகானந்தரும் அனைத்துலக சகோதரத்துவமும்' என்ற தலைப்பில் பெங்களூரூ எஸ்-வியாசா பல்கலைக்கழக இணைவேந்தர் சுப்பிரமணியம் பேசினார். இதில் டி.ஏ.டி. பள்ளித் தாளாளர் செல்வராஜ், காங்கயம் ஆக்ஸ்போர்ட் பள்ளி முதல்வர் சந்தோஷ்,  கிட்ஸ் பள்ளி ஆசிரியர் கதிரவன், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai