சுடச்சுட

  

  மடத்துக்குளம் வட்டம், காரத்தொழுவு கிராமத்தில் பிரதம மந்திரி ஓய்வூதிய திட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
  வேளாண் அலுவலர் இந்திரா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.ராஜேஸ்வரி தலைமை வகித்துப் பேசியதாவது: 
  விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் ஏராளமான பலன்கள் உள்ளன. இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் சேரலாம். விவசாயிகள் தங்கள் வயதுக்கு ஏற்ப மாதந்தோறும் ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்தலாம். 61 வயது முதல் மாதம்தோறும் விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் கிடைக்கும் என்றார்.
  இதைத் தொடர்ந்து விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர். கிராம தங்கல் பயிற்சி திட்டத்தில் பொள்ளாச்சி மனக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லூரி மாணவிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai