சுடச்சுட

  

  திருப்பூரில் செயல்பட்டு வரும் சூதாட்ட விடுதிகளை மூட வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 13th September 2019 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருப்பூரில் செயல்பட்டு வரும் சூதாட்ட விடுதிகளை மூட காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
  இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் திருப்பூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:                  
  தமிழகம் முழுவதிலும் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பொதுமக்கள் சார்பில் சுமார் 2  லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கு தொடர்ந்து அச்சுறுத்தலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இந்த ஆண்டு ஒரு மாதம் முன்பாகவே டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்ததன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தி விழா நல்ல முறையில் நடைபெற்றது. எனினும் சில இடங்களில் சில அதிகாரிகள் பிரச்னைகள் செய்தபோதிலும் இந்து முன்னணி சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டது. குறிப்பாக திருப்பூரில் பிரம்மாண்டமான முறையில் விழா நடைபெற்றதை லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் பார்வையிட்டுப் பாராட்டினார்கள். திருப்பூரில் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாப்பதில் இந்து முன்னணி முன்னிலையில் உள்ளது. திருப்பூரில் இயங்கிவரும் சூதாட்ட விடுதிகளை மூட காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். 
  இந்த சந்திப்பின்போது இந்து முன்னணி மாநிலச் செயலாளர்கள் ஜெ.எஸ்.கிஷோர்குமார், தாமு ஜி.வெங்கடேஸ்வரன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.செந்தில்குமார், சேவுகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai