சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  திருப்பூர், ராயபுரத்தில் உள்ள பிஎஸ்என்எல் பிரதான தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,  சங்கத்தின் மாநில உதவித் தலைவர் பா.சௌந்தரபாண்டியன் தலைமை வகித்தார். 
  இதில், 2017 ஜனவரி 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு ஓய்வூதியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ செலவுத் தொகையை தாமதமின்றி உடனடியான வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், பிஎஸ்என்எஸ் ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai