Enable Javscript for better performance
மருத்துவமனை முன் போராட்டம்:  இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவமனை முன் போராட்டம்:  இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்

    By DIN  |   Published on : 14th September 2019 07:15 AM  |   அ+அ அ-   |    |  

    திருப்பூரில் தனியார் மருத்துவமனை முன் போராட்டம் நடத்தியதற்கு இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
     இதுகுறித்து அந்த சங்கத்தின் திருப்பூர் கிளைத் தலைவர் மருத்துவர் செந்தில்குமரன், செயலாளர் மருத்துவர் என். ராஜ்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம்  வெள்ளிக்கிழமை கூறியதாவது:
     திருப்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவர்கள் மூலமாக தரமான முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம். கோவை, சேலம், ஈரோடு நகரங்களைக் காட்டிலும் திருப்பூரில் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.
     திருப்பூரில் உள்ள ஆன்மிக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் ரத்த தான முகாம், கண் சிகிச்சை முகாம்களையும் இந்திய மருத்துவர் சங்கம் இணைந்து நடத்தி வருகிறது. எந்த ஒரு மருத்துவரும் நோயாளியின் உயிரைக் காக்கதான் போராடுவார்கள். நல்ல எண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படும் சிகிச்சையில் நோயாளிகள் மரணிக்கும்போது சிகிச்சை அளித்த மருத்துவரும் துயரமடைவது வழக்கம். இந்த சமயங்களில் சில நபர்கள் மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் தேவையற்ற போராட்டங்களை நடத்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சிகிச்சையில் தவறு இருப்பதாகக் கருதினால் மாவட்ட ஆட்சியர், மருத்துவ இணை இயக்குநர், மருத்துவ கவுன்சில் அல்லது காவல் துறையினரை அணுகி புகார் அளிக்கலாம். 
     இதை விடுத்து மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி பொதுமக்களை குழப்புவதையோ, மருத்துவர்களை மிரட்டுவதோ கண்டிக்கத்தக்கது என்றார்.

    kattana sevai