Enable Javscript for better performance
விவசாய மின் இணைப்பில் மீட்டர் பொருத்தும் பணி ரத்து: மின்வாரியத்தினர் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    விவசாய மின் இணைப்பில் மீட்டர் பொருத்தும் பணி ரத்து: மின்வாரியத்தினர் உறுதி

    By DIN  |   Published on : 14th September 2019 07:20 AM  |   அ+அ அ-   |    |  

    விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து இலவச மின் இணைப்பில் மின் மீட்டர் பொருத்தும் பணி மேற்கொள்ளப்போவதில்லை என மின்வாரியத்தினர் உறுதி அளித்துள்ளனர்.
     அவிநாசி மின்வாரியத்துக்கு உள்பட்ட  பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் அரசின் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாள்களாக சேவூர், அவிநாசி பகுதிகளில் உள்ள விவசாயிகள் தோட்டத்தில் இலவச மின்சார இணைப்பில் மின் மீட்டர் பொருத்துவதற்காக மின்வாரிய ஊழியர்கள் சென்று வந்தனர். அதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மின்மீட்டர் பொருத்தாமல் மின் வாரியத்தினர் திரும்பிச் சென்றனர்.
     மின்வாரிய அலுவலர்கள், மின்மீட்டர்  பொருத்த முயற்சிப்பதை அறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவிநாசி - மங்கலம் சாலை மின்வாரிய அலுவலகத்தை இரு முறை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
     இந்நிலையில் அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
    விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பில் மின் மீட்டர் பொருத்தும் பணி மேற்கொள்ளப்போவதில்லை. அனைத்துப் பிரிவு பொறியாளர்களுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    kattana sevai