ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தல்

கொங்கு மண்டல விவசாயிகளின் நலன் கருதிஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொங்கு மண்டல விவசாயிகளின் நலன் கருதிஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் திருப்பூர் மாவட்ட இளைஞரணி தலைவர் வாவிபாளையம் சோமசுந்தரம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்  காமராஜர் ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டு கடந்த 52 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. தமிழக,கேரள அரசுகள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கேரளம் இடைமலையாறு அணை கட்டிய பிறகு ஒரு துணை ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு ஆனைமலை ஆறு அணைத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 
 இடமலையாறு அணையை கேரள அரசு 1970-இல் தொடங்கி 1985-இல் கட்டி முடித்ததாக அம்மாநில அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வோராண்டும் இரு மாநில அரசு அதிகாரிகள் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, மேற்கண்ட திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என கேரள அரசு அதிகாரிகள் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
 ஆனைமலையாறு, நல்லாறு அணை திட்டத்தை செயல்படுத்தினால் சுமார் 13 டிஎம்சி கூடுதல் நீர் திருமூர்த்தி அணைக்கு கிடைக்கும். இதன் மூலம் 4.25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என நீர்வளத் துறை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com