காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயில் உடைப்பு: வெள்ளக்கோவிலில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய் உடைந்ததால் வெள்ளக்கோவில் பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய் உடைந்ததால் வெள்ளக்கோவில் பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
 வெள்ளக்கோவில் நகராட்சி, சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தினமும் 55 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. இதேபோல அமராவதி குடிநீர்த் திட்டம் மூலம் புதுப்பை தடுப்பணைப் பகுதியிலுள்ள ராட்சத கிணற்றிலிருந்தும் தண்ணீர் கிடைத்து வருகிறது. 
  தற்போது அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் அங்கிருந்து தண்ணீர் கிடைப்பதில்லை. இந்நிலையில், முத்தூர்- வெள்ளக்கோவில் சாலை மாந்தபுரத்தில் கொடுமுடி காவிரி குடிநீர்த் திட்டப் பிரதானக் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த மூன்று தினங்களாக வெள்ளக்கோவில் பகுதிக்குத் தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. மக்கள் தண்ணீரின்றித் தவித்து வருகின்றனர்.
  இந்நிலையில், பிரதானக் குடிநீர் விநியோகக் குழாயில் உடைப்பை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. அமராவதி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் இன்னும் ஓரிரு நாள்களில் புதுப்பைப் பகுதியை வந்தடையும். விரைவில் குடிநீர் விநியோகம் சீராகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com