குடிமங்கலம் ஒன்றியத்தில் ரூ.150 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் பேச்சு

குடிமங்கலம ஒன்றியத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன என்று

குடிமங்கலம ஒன்றியத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன என்று கால்நடை  பராமரிப்புத் துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத் தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார். 
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பூளவாடி கிராமத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.  
இதில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பட்டம் பெற்ற பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம், பட்டயம் படிப்புப் படித்த பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கல்விக்காக ஆண்டுதோறும் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கி வருகிறது. இதனால்தான் கல்வித் துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. 
குடிமங்கலம் ஒன்றியத்துக்கு  உள்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெரும் விதத்தில் ரூ. 56 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திருமூர்த்திமலை கூட்டுக் குடிநீர்த் திட்டம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஏராளமான கிராமங்களுக்கு புதிய பேருந் து வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.  குடிமங்கலம ஒன்றியத்தில் மட்டும் சாலை வசதிகளை மேம்படுத்த ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன. அதிமுக அரசின் சாதனைகள் தொடரும் என்றார்.
இதைத் தொடர்ந்து அண்ணா பிறந்த நாள் விழாவை ஒட்டி சுமார் ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகிகள், பூளவாடி கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com