Enable Javscript for better performance
சிக்கண்ணா கல்லூரியில் என்எஸ்எஸ் பொன் விழா- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் சிக்கண்ணா கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட பொன் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட பொன் விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கல்லூரி வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். 
    பின்னர் கல்லூரி நுழைவாயிலில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாணவர்களிடம் முதல்வர் தீபா விநியோகித்தார். மேலும், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து அல்சைமர் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு ரிப்பன் அணிவித்து அந்த நோயால் ஏற்படும் மனநிலை மாற்றங்கள், பணிகள் முடிப்பதில் சிரமம், மறதி போன்ற அறிகுறிகள் குறித்து எடுத்துரைத்தார். 
    இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் புஷ்பலதா, விநாயகமூர்த்தி, பாண்டியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai