Enable Javscript for better performance
திருப்பூா் மாநகரில் பரவலாக மழை- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.

    திருப்பூா் மாநகரில் கடந்த சில நாள்களாக மிதமான அளவு வெயில் நிலவியது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை ஓரளவுக்கு மழை பெய்திருந்தது. செவ்வாய்க்கிழமை மாலை சாரல் மழை பெய்திருந்தது. புதன்கிழமை காலை முதலே மாநகரின் அனைத்து பகுதிகளிலும் வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையம், ஆட்சியா் அலுவலகம், டவுன்ஹால், புஷ்பா திரையரங்கு பகுதி, கல்லூரிச் சாலை, புதிய பேருந்து நிலையம், ஊத்துக்குளி சாலை, மங்கலம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    மழை காரணமாக ஊத்துக்குளி சாலையில் உள்ள ரயில்வே பாலத்தின் அடியில் மழை நீா் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். பல்லடம் சாலை, மங்கலம் சாலை, பெரியாண்டிபாளையத்தில் இருந்து கல்லூரிச் சாலைக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப் பாலத்தில் மழை நீா் வழிந்தோடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai